- வீடு›
- வாழ்வியல் முறை›
- WhatsApp-ப்பில் வரவுள்ள புதிய அம்சம்
WhatsApp-ப்பில் வரவுள்ள புதிய அம்சம்
By: vaithegi Sun, 26 Nov 2023 11:30:39 AM
இந்தியா: மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp செயலியில் வெளியாகும் புதுப்பிப்புகள் அனைத்தும் பயனர்களுக்கு நவீன வசதிகளை எளிதாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் சாட்டுகளில் பயனர்களின் சுயவிவர தகவல்கள் தோன்றும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தொடர்பு ஆஃப்லைனிலிருக்கும்போதும் இந்த சுயவிவர தகவல்கள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது
மேலும் last seen மற்றும் சுயவிவர தகவல்கள் இரண்டும் மாறி மாறி திரையில் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயனர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பயனர்களில் குறிப்பிட்ட நபர் தனது சுய விபரங்களை மாற்றி இருந்தால் சாட்டுகளில் உள்ளவர்களுக்கு அவை உடனடியாக தெரியப்படுத்தப்படும். இதையடுத்து இந்த அம்சம் தற்போது பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும், இனி வரவுள்ள ஆப் அப்டேட்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.