- வீடு›
- வாழ்வியல் முறை›
- Windows பயனர்களுக்காக மீண்டும் வியூ ஒன்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம்
Windows பயனர்களுக்காக மீண்டும் வியூ ஒன்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம்
By: vaithegi Mon, 27 Nov 2023 12:39:43 PM
இந்தியா: Windows பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் ....வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல அம்சத்தினை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனர்களுக்கு ஒரு முறை மட்டும் பார்க்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டியிருந்தது.
மேலும், பயனர்களின் பாதுகாப்பிற்காக கேலரியில் சேமிக்க முடியாத வகையில் இருந்தது. இதன் பின்னர், இந்த அப்டேட்டை வாட்ஸ்அப் திரும்ப பெற்றது.
இந்த நிலையில், ரகசியத் தகவலைப் பகிர்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பயனர்கள் மீண்டும் அந்த அப்டேட்டை வழங்கும்படி கேட்டனர்.
இதனால், டெஸ்க்டாப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு முறை மட்டுமே காணும் வியூ ஒன்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்து உள்ளது. இந்த அப்டேட்டை விண்டோஸ் மற்றும் மேக் பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.