Advertisement

அலுவலகம் செல்லும் போது இந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டாம்!

By: Monisha Wed, 16 Dec 2020 2:06:37 PM

அலுவலகம் செல்லும் போது இந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டாம்!

இடங்களுக்கு ஏற்ற வகையில் ஆடை அணிவது ஒரு கலையாகும். பொதுவாக அலுவலகங்களுக்கு பார்மல் ஆடைகளைத்தான் அதிகம் பயன்படுத்துவோம். இருப்பினும், நாம் அணியும் ஆடைகள் மரியாதையை பெற்று தருமா? என்பதை கவனிக்க வேண்டும். இந்த பதிவில் அலுவலகம் செல்லும் பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஒளி புகும் வகையில், அதாவது உங்கள் உள்ளாடை வெளியே தெரியும் வகையிலான ஆடைகளை தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆடைகள் அலுவலகத்தில் மற்றவர்களின் கவனத்தை பாதிப்பதோடு, உங்களுக்கான மரியாதையையும் குறைத்துக் கொள்ளும் வகையில் அமைந்து விடும்.

பல நவீன ரக ஆடைகள், அலுவலக தேவைகளுக்கு என்று இருந்தாலும், அவற்றில் சில குறைந்த கழுத்து பகுதிகளை கொண்டிருக்கும். அதாவது, மிகவும் இறக்கமான கழுத்து பகுதி மற்றும் முதுகு பகுதி. இது உங்கள் சருமத்தை வெளிகாட்டும் வகையில் இருக்கும். இத்தகைய ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இது நாகரீகமாகவும் இருக்காது.

office,women,clothes,courtesy,luxury ,அலுவலகம்,பெண்கள்,ஆடைகள்,மரியாதை,ஆடம்பரம்

கைகள் இல்லாத ஆடைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. இவை உங்களுக்கு அணிவதற்கு வசதியாக இருந்தாலும், பிறர் கவனத்தி அதிகம் ஈர்க்கும் அல்லது பாதிக்கும் வகையிலும் இருக்கும். கடைகளில் ரெடிமேட் ஆடைகள் கிடைத்தாலும், முடிந்த வரை ஒரு தையர்காரரிடன் சரியான அளவு கொடுத்து, துணிகளை வாங்கித் தந்து உங்களுக்கு ஏற்றவாறு தைத்து வாங்கிக் கொள்ளுங்கள். இது நீடித்து உழைப்பதோடு, உங்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும்.

பெண்கள் அலுவலகம் செல்லும் போது தங்களது காலணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சரியான மற்றும் பார்க்க நாகரீகமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக உங்களுக்கு நடக்க எதுவாக இருக்க வேண்டும்.

office,women,clothes,courtesy,luxury ,அலுவலகம்,பெண்கள்,ஆடைகள்,மரியாதை,ஆடம்பரம்

முடிந்த வரை அலுவலகம் செல்லும் போது தேவையற்ற மற்றும் பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணிகலன்கள் அணிவதை தவிர்ப்பது நல்லது. இது உங்களது தொழில்முறை தோற்றத்தை பாதிப்பதோடு, உங்கள் மரியாதையை குறைக்கும் வகையிலும் அலுவலகத்தில் இருக்கலாம்.

அலுவலகம் செல்லும் போது பொதுவாக ஆடம்பரத்தை முற்றிலும் வெளிபடுத்தாமல் ஆடை அணிவது நல்லது. மேலும் விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகை ஆபரணங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கே ஒரு தருணத்தில் அசௌகரியத்தை அலுவலகத்தில் உண்டாக்கலாம்.

Tags :
|
|