Advertisement

ஒவ்வொரு ஆணிடமும் இருக்கவேண்டிய அத்தியாவசிய ஆடைகள்!

By: Monisha Sat, 26 Sept 2020 2:44:37 PM

ஒவ்வொரு ஆணிடமும் இருக்கவேண்டிய அத்தியாவசிய ஆடைகள்!

இன்றைய நாகரீக உலகில், நாம் உடுத்தும் உடையே வைத்தே நம்மை எடை போடுவார்கள். அதனால் ஆண்கள் இப்பொழுதுள்ள நாகரீக ஒழுக்க நிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாகரீக உலகில் வாழும் ஒவ்வொரு ஆணிடமும் இருக்கவேண்டிய சில அத்தியாவசியமான உடை அலமாரி பொருட்கள் நிறைய இருக்கின்றன.

உங்கள் தொழிலுக்கும் விழாவிற்கும் தேவையான சில இன்றியமையாத உடை அலைமாரிப் பொருட்கள் இருக்கின்றன. உங்கள் மேலதிகாரியுடனான சந்திப்பிற்கு ஸ்நீகர் அணிந்து செல்ல முடியாது அதேபோல் இரவு பார்ட்டிக்கு பார்மலாக உடை அணிந்து செல்ல முடியாது. அதனால், உங்கள் உடை அலமாரியில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு தேவையான உடைகள் அனைத்தும் சரிசமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு முறையும் உடை வாங்கக் கடைக்குச் செல்லக்கூடாது.

fashion,clothing,formal,jeans,belts ,நாகரீகம்,ஆடைகள்,பார்மல்,ஜீன்ஸ்,பெல்ட்கள்

காகிஸ் மற்றும் ஜீன்ஸ்
சாதராணமாக உடை அலங்காரத்திற்கு இது தான் சரியான தேர்வு. சாதாரணமாக வெளியில் செல்வதற்கு உங்கள் உடை அலமாரியில் கட்டாயம் சில ஜீன்ஸ்களும், சில காகிஸ்களும் மிகவும் அவசியமானதாகும்.

ஷூக்கள்
ஷூக்கள் ஃபார்மல் உடைக்கு தேவையான ஃபார்மல் ஷூக்களை ப்ரவுன் அல்லது கருப்பு நிறங்களில் ஒன்றிக்கும் மேலாக வைத்திருப்பது நல்லது. ஜீன்ஸ் மற்றும் காகிஸ் போன்றவற்றை அணிவதாக இருந்தால், சாதாரண ஷூக்கள் ஒன்றாவது கட்டாயம் இருக்க வேண்டும்.

சாதாரண சட்டைகள்
சாதாரண சட்டைகள் சில நேரங்களில் சில விழாக்களுக்கு சாதாரண உடை அணிவதா அல்லது ஃபார்மல் உடை அணிவதா என்ற குழப்பம் ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் சாதாரண உடை அணிவதையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் வெள்ளை அல்லது வண்ண கோடுகள் போட்ட சட்டையை தேர்ந்தேடுத்தால், அவை உங்களை காஷுவலாகவும் நேர்த்தியாகவும் காட்டும்.

fashion,clothing,formal,jeans,belts ,நாகரீகம்,ஆடைகள்,பார்மல்,ஜீன்ஸ்,பெல்ட்கள்

வெள்ளை சட்டை
வெள்ளை சட்டை வெள்ளை என்றாலே அரசியல்வாதிகளுக்கு தான் என்பதல்ல. ஃபார்மல் பேண்ட்களுக்கு இவற்றை அணிந்தால், உங்களை நேர்த்தியாகவும், தனித்தும் காட்டக் கூடியவை. மேலும் வெள்ளை சட்டை எல்லோருக்கும் பொதுவாகவே நன்றாக பொருந்தக்கூடிய ஒன்று.

பெல்ட்கள்
பெல்ட்கள் இது உங்களுக்கு நிறையவே தேவைப்படும். உங்கள் உடை அலங்காரத்தை பூர்த்தி செய்ய இது இன்றியமையாததாகும். மேலும் இதனை ஆசையுடன் வாங்கலாம். உங்களுக்கு ஃபார்மல் மற்றும் காஷுவல் பெல்ட்களுடன் பல வகை ஃபார்மல் மற்றும் காஷுவல் பக்கிள்களும் தேவைப்படும்.

Tags :
|
|