Advertisement

பெண்களை கவரும் பட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள்!

By: Monisha Thu, 03 Dec 2020 2:40:27 PM

பெண்களை கவரும் பட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள்!

பட்டு புடவைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு நம் நாட்டு பெண்களிடையே பட்டு புடவை அவ்வளவு பிரபலம். பட்டு புடவை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இதனால் மற்ற புடவைகளை விட, பட்டு புடவைகளுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உண்டு.

பல நிறங்களிலும், வடிவங்களிலும், மற்றும் ராகங்களிலும் பட்டு புடவைகள் கிடைகின்றன. ஆனால், இந்த பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் விதமாக அதற்கு ஏற்ற பிளவுஸ் தேர்வுகளும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் அணியும் பட்டு புடவை உங்களுக்கு அழகாகவும், நல்ல தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சரியான பிளவுஸ்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

இன்று கடைகளில் பல வகைகளிலும், ரகங்களிலும் பிளவுஸ்கள் பட்டு புடவைகளுக்கு கிடைகின்றன. இந்த பதிவில் பட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

women,fashion,colors,blouses,silk sarees ,பெண்கள்,பேஷன்,நிறங்கள்,பிளவுஸ்கள்,பட்டு புடவை

* பட்டு புடவைகளின் பிளவுஸ்கள் நீங்கள் அணியப்போகும் அந்த விழாவிற்கு ஏற்றதாக இருக்கும் படி தேர்வு செய்ய வேண்டும்.

* இந்த பிளவுஸ்கள் பருத்தி பட்டு, சுத்தமான பட்டு மற்றும் ராசில்க் எனப்படும் பட்டு வகை துணிகளால் வடிவமைக்கப்படுகின்றது.

* திருமண பட்டு புடவை பிளவுஸ்கள் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படுகின்றது.

* தோள், கைகள், முதுகு பகுதி என்று அனைத்தும் மிக கவனத்தோடு வடிவமைக்கபடுகின்றது.

* ஒரு எளிமையான பட்டு பிளவுஸ்கள் குறைந்த வேலைபாடுகளுடன் வரும். அவற்றில் குறைவான கற்கள் பாதிக்கும் வேலைபாடுகளே இருக்கும்.

* வித விதமான கழுத்து பகுதி, கைகள் என்று பல வடிவங்களில் இந்த பிளவுஸ்கள் வடிவமைக்கப்படுகின்றது.

* இவை தனித்துவம் வாய்ந்த தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது.

Tags :
|
|