Advertisement

உடை கலாசாரத்தில் நீங்கள் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

By: Monisha Sat, 27 June 2020 4:05:07 PM

உடை கலாசாரத்தில் நீங்கள் எந்த வகை என்று தெரிந்து கொள்ளுங்கள்!

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட, புதிய டிசைன் புடவை உருவாக்கலாம். இதன் மூலம் புதிய டிசைன் புடவைகளும் கிடைக்கும்.

இரண்டு ஸ்டைல்களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது தான் காக்ரா சாரி. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். அடுத்து தாவணி ஸ்டைல், புடவையில் ஒரு புடவை இரு கலராகத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் பாவாடை- தாவணி அணிந்திருப்பதுபோல் தோன்றும்.

saree,tradition,elegant style,feminine style,creative style ,புடவை,பாரம்பரியம்,எலிகண்ட் ஸ்டைல்,பெமினைன் ஸ்டைல்,கிரியேட்டிவ் ஸ்டைல்

புடவை கட்டும்போது அவிழ்ந்துவிடுமோ என்று டீன்ஏஜ் பெண்கள் பயப்படவேண்டியதில்லை. பாவாடை கட்டுவதுபோல் நாடா இணைத்துள்ள புடவைகளும் அறிமுகமாகிவிட்டன. உடை கலாசாரத்தை எடுத்துக்கொண்டால் மொத்தம் 6 விதங்கள் இருக்கின்றன.

1. கிளாசிக் அண்ட் டிரடீஷனல் (பட்டு போன்ற பளிச்சென்ற பாரம்பரிய அழகு ஆடைகளில் இவர்கள் ஆர்வம் கொண்டவர்கள்)

2. எலிகண்ட் ஸ்டைல் (துல்லியமான அளவில் தைத்து, நேர்த்தி குறையாமல் அணிபவர்கள் இவர்கள்)

3. பெமினைன் ஸ்டைல் (இளம் நிறத்திலான உடைகளை தேர்வு செய்பவர்கள். பெரும்பாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்)

saree,tradition,elegant style,feminine style,creative style ,புடவை,பாரம்பரியம்,எலிகண்ட் ஸ்டைல்,பெமினைன் ஸ்டைல்,கிரியேட்டிவ் ஸ்டைல்

4. கிளாமரஸ் பிரிவு (பளிச்சென்ற ஜிகினா ஸ்டைல் உடைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கான வகை),

5. டிரமாட்டிக் ஸ்டைல் (இந்த வகை உடைகளில் ஒரு நாடகம் அரங்கேறியதுபோல் காட்சிகள் இருக்கும். இந்த வகை உடைகள் எல்லோரது பார்வையையும் சுண்டி இழுக்கும்)

6. கிரியேட்டிவ் ஸ்டைல் (இவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கபடி புதிதாக ஆடைகளை வடிவமைத்து கேட்பவர்கள்).

ஒரு பெண் இந்த 6 வகை உடைகளில் எதில் கவனம் செலுத்துகிறாரோ அதை வைத்து அவர் டேஸ்ட், குணங்களை கணித்துவிடலாம். தமிழ் நாட்டில் கிளாசிக்கல் அண்ட் டிரடீஷனல் உடைகளை தேர்ந்தெடுப்பவர்களே அதிகம்.

Tags :
|