Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • வெப்பமான காலத்தில் ஆடைகளை இதமானதாகவும், ஃபேஷனாகவும் தேர்ந்தெடுப்பது எப்படி?

வெப்பமான காலத்தில் ஆடைகளை இதமானதாகவும், ஃபேஷனாகவும் தேர்ந்தெடுப்பது எப்படி?

By: Monisha Wed, 07 Oct 2020 1:03:25 PM

வெப்பமான காலத்தில் ஆடைகளை  இதமானதாகவும், ஃபேஷனாகவும் தேர்ந்தெடுப்பது எப்படி?

இந்தியா ஒரு வெப்ப பிரதேச நாடாகும். அதனால் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகளவில் காணப்படும். எனவே கோடைக்காலத்தில் நாம் அணிய வேண்டிய உடைகள் இதமானதாகவும், அதே சமயம் ஃபேஷனாகவும் இருக்க வேண்டும். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது. இந்த பதிவில் நாம் கோடைக் காலத்திற்கான ஆடைகளை இதமானதாகவும், ஃபேஷனாகவும் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பருத்தி சேலைகள்
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

heat,fashion,clothing,cotton,loose pants ,வெப்பம்,ஃபேஷன்,ஆடைகள்,பருத்தி,லூசான பேன்ட்

நீளமான பாவாடைகள்
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

லூசான பேன்ட்
இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்.

பருத்தி ஆடைகள்
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

heat,fashion,clothing,cotton,loose pants ,வெப்பம்,ஃபேஷன்,ஆடைகள்,பருத்தி,லூசான பேன்ட்

சல்வார் கமீஸ்
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

காதி
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.

ஹாரெம் பேன்ட்
ஹாரெம் பேன்ட் தற்போது நடப்பிலுள்ள ஆடையாகும். இவை லூசாக இருப்பதால், வெப்பமான நேரத்தில் சிறந்த ஆடையாக இருக்கும். ஆனால் பருத்தி வகை ஹாரெம் பேன்ட்களை அணியுங்கள். சிந்தடிக் வகை ஆடைகள் கசகசவென இருக்கும்.

Tags :
|
|