Advertisement

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் எப்படி செய்வது?

By: Monisha Wed, 22 July 2020 6:08:31 PM

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் எப்படி செய்வது?

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின். இப்போது புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்களை பார்க்கலாம். புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். நகை எதுவும் போடமா இருந்தா கூட பிரச்சனையில்லை. ஆனால் ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின்.

நீங்க ரொம்ப நேரம் புடவையில் இருக்க வேண்டும் என்றால் ப்ரீ ஹேர் விடுவது சூப்பரா இருக்கும். ஆனா இது குறைவான முடி உள்ளவர்களுக்கு மட்டுமே செட்டாகும். நார்மல் ஜடை போட்டு தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பெண்கள் ஜிமிக்கி மற்றும் நெக்லஸ் போட்டால் சூப்பரா சர்வ லட்சணமும் பொருந்தின மாதிரி இருக்கும்.

saree,hairstyle,jasmine flower,modern ,புடவை,ஹேர் ஸ்டைல்,மல்லிகை பூ,மாடர்ன்

புடவைக்கு ஏற்ற பாரம்பரிய ஹேர் ஸ்டைல் தான் இந்த கொண்டை. உங்கள் உயரத்திற்கு ஏற்ற மாதிரி உயரமான கொண்டையா அல்லது நார்மலான கொண்டையா என்பதை தேர்வு செய்யலாம். இதில் பூக்களை வைத்து அலங்கரித்தால் சூப்பராக இருக்கும்.

லேயர் ஹேரில் பேன்சியாக சில சிறிய கொண்டைகளை போட்டுக்கொண்டு சென்றால், நீங்கள் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பாக அமையும். ஆனால் இதற்கு உங்களுக்கு ஒரு எக்ஸ்பேர்ட்டின் உதவி தேவை. போனி டெயிலை சற்று வித்தியாசமாக போட்டு சென்றால் நீங்கள் மாடர்ன் பெண் போல காட்சியளிப்பீர்கள். இது டிசைனர் புடவைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அழகாக புடவை அணிந்து கொண்டை போட்டு சுற்றி மல்லிகை பூ வைத்தாலும் சூப்பராக இருக்கும்.

Tags :
|