Advertisement

வீடுகளில் சமையலறை அலமாரிகளை பராமரிக்கும் வழிமுறைகள்

By: Karunakaran Tue, 08 Dec 2020 7:05:24 PM

வீடுகளில் சமையலறை அலமாரிகளை பராமரிக்கும் வழிமுறைகள்

பிவிசியினால் செய்யப்பட்ட அலமாரிகளைச் சுத்தம் செய்ய டிஷ்யு காகிதங்கள் அல்லது பழைய துணிகளை உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்குப் பிடித்த பிவிசி கதவுகளை சுத்தம் செய்ய முதலில் டிஷ்யு காகிதத்தில் இரண்டு மூன்று சொட்டுகள் ஏதாவது ஒரு எண்ணெயை விட்டு அதைக்கொண்டு அந்தக் கதவுகளை சிறிது அழுத்தம் கொடுத்து தேய்க்கும் பொழுது அதில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

மாடுலர் கிச்சன் டிராலிகளை வெளியே இழுக்கும் பொழுது அதன் இரண்டு பக்கவாட்டிலும் கிளிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். அந்தக் கிளிப்புகளை ஒருபுறம் கீழேயும், மறுபுறம் மேலே தூக்கி விட்டு டிராலிகளை எளிதாக தனியே கழற்ற முடியும். கழற்றிய டிராலிகளை சிறிய பிரஷ்களைக் கொண்டு அதில் படிந்திருக்கும் தூசுகளை அகற்றலாம். அதேபோல் டிராலிகளைப் பொருத்தும் மெட்டல் சட்டங்களையும் இந்த பிரஷ்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். அதன் பின்னர் இவற்றிற்கென்றே பிரத்தியேகமாகத் தடவக்கூடிய எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சிறிய பெயிண்ட் அடிக்கும் பிரஷ் கொண்டு அந்த மெட்டல் சட்டங்களில் தடவலாம்.

womens,maintaining,kitchen cabinets,home ,பெண்கள், பராமரித்தல், சமையலறை பெட்டிகளும், வீடு

வினிகர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த திரவத்தை ஸ்பிரே செய்து கேபினட், டிராலிகளின் கம்பிகள் போன்றவற்றை மிகவும் அருமையாக மென்மையான ஸ்க்ரப் கொண்டு சுத்தப்படுத்த முடியும். சுத்தம் செய்த டிராலிகளை நன்கு ஈரம் பிழியப்பட்ட துணிகளைக்கொண்டு துடைத்து எடுக்கவும். பின்பு டிராலிகளை ஈரம் போக உலர்த்தவும். இதுபோன்று வருடம் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்வதால் இவற்றை வெளியே இழுத்து மூடுவது எளிதாவதோடு துருப்பிடிப்பதும் தவிர்க்கப்படுகின்றது.

சில வீடுகளில் சமையலறை கேபினட்டுகள் உறுதியான மரம் அல்லது பிளைவுட்டுகளினால் செய்யப்பட்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவுடன் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது எண்ணெயைக் கலந்து பசை போல் செய்து கொள்ளவும். அந்தப் பசையை மரக்கேபினட்டுகளின் மீது தடவி பத்து நிமிடம் ஊறவைக்கவும். மென்மையான பிரஷ் அல்லது ஸ்க்ரப் கொண்டு அவற்றைத் தேய்த்து பின்னர் மென்மையான காட்டன் துணி கொண்டு அவற்றைத் துடைத்து எடுத்தால் அவற்றின் மீது படிந்திருக்கும் கறைகள் மட்டுமல்லாது பிசுபிசுப்பும் போய்விடும்.


Tags :
|