Advertisement

விதவிதமான காலணிகளை வாங்கும் முன்பு கொஞ்சம் கவனம் தேவை!

By: Monisha Sat, 10 Oct 2020 1:30:14 PM

விதவிதமான காலணிகளை வாங்கும் முன்பு கொஞ்சம் கவனம் தேவை!

விதவிதமான காலணிகளை அணிய ஆசைப் படும் முன்பு அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதா இல்லையா என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?. நீங்கள் அணியும் காலணிகளில் சில உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. எந்த எந்த காலணிகளை எப்போது அணிய வேண்டும் எவற்றை அணியக் கூடாது என்பதையும், வாங்கும் காலணிகளில் எது உங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதையும் முதலில் தெரிந்து கொண்டு பின்பு உங்களுக்குப் பிடித்த சரியான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்!

பாயிண்ட்டு ஷூ உங்களுடைய பாதங்களை எப்போதும் பாதுகாக்காது. இது மிகவும் இறுக்கமாக இருப்பதால் உங்கள் கால்களுக்கு மிகுதியான அழுத்தத்தைத் தரும். அத்துடன் உங்கள் நரம்புகளுக்கு வலியை ஏற்படுத்தும். எந்த பாதங்களும் இறுக்கமான பாயிண்ட்டு ஷூவுக்குள் அடங்கி இருக்க விரும்பாது. எனவே அடுத்த முறை பாயிண்ட்டு ஷூ வாங்கும் போது சற்று உங்கள் பாதங்களுக்கு ஏற்ற ஒன்றாகத் தேர்வு செய்யுங்கள். மிக இறுக்கமான ஒன்றை வாங்க வேண்டாம்.

fashion,shoes,pointed shoes,high heels,damage ,பேஷன்,காலணிகள்,பாயிண்ட்டு ஷூ,ஹை ஹீல்ஸ்,கேடு

எல்லா பெண்களும் அணிய விரும்பும் ஒன்று ஹை ஹீல்ஸ் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இது உங்களை மிகக் கவர்ச்சியுடன் காட்டும் ஒன்று தான் ஆனால் அதை விடப் பெரிய பிரச்சனைகளையும் ஹை ஹீல்ஸ் கொண்டுள்ளது. ஹை ஹீல்ஸ் அணிவதால் நரம்பு பாதிப்பு, கால் விரல் நகப் பாதிப்புகள் மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த மாதிரியான பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் அணியும் ஹை ஹீல்ஸ் மூன்று இன்ச் குறைவாக இருக்குமாறு அணியலாம். அத்துடன் இந்த ஹை ஹீல்ஸை தினமும் பயன்படுத்தாமல் தேவையான போது மட்டும் பயன்படுத்தினால் நல்லது.

பிளாட் ஷூ இவையும் உங்கள் கால்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடிய ஒன்று தான் என்று கூறினால் நம்ப மாட்டீர்கள். ஆனால் உண்மையிலேயே பிளாட் ஷூக்களும் உங்கள் கால்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். அதாவது இந்த பிளாட் ஷூ உங்கள் பாதத்தின் மேற்பகுதியில் எந்த வித பிடிப்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த இடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு மூட்டுவலி அல்லது முதுகுவலி ஏற்படலாம். இதற்காக நீங்கள் பிளாட் ஷூ அணிய வேண்டாம் என்ற அர்த்தமில்லை. உங்கள் கால்களின் நிலையைச் சரியாக வைக்க ஓர்தொட்டிக்(Orthotic) ஷூக்களை நீங்கள் வாங்கலாம்.

fashion,shoes,pointed shoes,high heels,damage ,பேஷன்,காலணிகள்,பாயிண்ட்டு ஷூ,ஹை ஹீல்ஸ்,கேடு

ரன்னிங் ஷூ மிகவும் மென்மையாகவும் லேசானதாகவும் இருக்கும் இதனால் நீங்கள் ஓடும் போது சில காயங்கள் ஏற்பட வழிகள் உள்ளன. எனவே நீங்கள் அத்லெட்டிக் ஷூக்களை தேர்வு செய்யலாம். இவை அடியில் சற்று கனமான பேட்களை (pad) கொண்டிருக்கும். மேலும் உங்கள் பாதங்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

பிளாட்ஃபார்ம் காலணிகள் உங்கள் பாதங்களுக்கு ஏற்ற ஒன்று இல்லை. உங்கள் கால்கள் மடங்கும் தன்மையைப் பெற்று இருப்பதால் நீங்கள் எந்த வகையான காலணிகளை வேண்டுமானாலும் அணியலாம் என்று நினைப்பது தவறு. இந்த பிளாட்போர்ம் காலணிகள் உண்மையில் நம் நடப்பதற்கு எதிர்மாறாகத் தான் செயல்படுகின்றன. இது தவறான நடைப்பயிற்சிக்கு உங்களைப் பழக்கும். எனவே அடிக்கடி இந்த பிளாட்ஃபார்ம் காலணிகளை அணியாமல் இருப்பதே நல்லது.

Tags :
|