Advertisement

பெர்சனாலிட்டியை நவநாகரீகமாகவும் அழகாகவும் வெளிப்படுத்த சில டிப்ஸ்!

By: Monisha Tue, 29 Sept 2020 1:07:22 PM

பெர்சனாலிட்டியை நவநாகரீகமாகவும் அழகாகவும் வெளிப்படுத்த சில டிப்ஸ்!

அழகு என்பது ஆடைகளை வைத்துத் தீர்மானிக்கும் விஷயம் இல்லை. ஆனால் உங்களின் பெர்சனாலிட்டியைத் தீர்மானிக்க மற்றவர்கள் கடைப்பிடிக்கும் ஒரே ஆயுதம் உங்களின் ஆடைகள் தான். எனவே உங்களை பெர்சனாலிட்டியை நவநாகரீகமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி கொள்ள உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்.

போர்மல் ஷர்ட்
நீங்கள் அணியும் போர்மல் ஷர்ட் எப்போதும் இன் செய்து போடக் கூடாது. அதிலும் வெள்ளை ஷர்ட் என்பது கோர்ட் சூட் அணிவதற்கு உள்ளே பயன்படுத்தும் ஒன்று. அந்த சட்டையை நீங்கள் ஃபார்மல் ஷர்ட் ஆக அணியக் கூடாது. அப்படி வெள்ளை சட்டை அணிய வேண்டுமானால் கண்டிப்பாக இன் செய்து தான் அணிய வேண்டும். மற்ற வண்ணங்களில் உள்ள சட்டைகளை மிக பிட் ஆக அணிந்து ஸ்டைலிஷ் லுக் கொடுங்கள்.

personality,trendy,beauty,fashion,stylish look ,பெர்சனாலிட்டி,நவநாகரீகம்,அழகு,பேஷன்,ஸ்டைலிஷ் லுக்

சாக்ஸ்
நீங்கள் அணியும் ஷூக்கு எப்போதும் சாக்ஸ் அணியக் கூடாது. நீங்கள் அணியும் பீச் ஷூ மற்றும் சாண்டல் ஷூக்களுக்கு மட்டுமே சாக்ஸ் அணிய வேண்டும் மற்ற நேரங்களில் சாக்ஸ் அணிவதைத் தவிருங்கள். ஏனெனில் நீங்கள் அணியும் சாக்ஸ் உங்கள் பாதங்களுக்குள் காற்றினை செல்லவிடாமல் தடுத்து துர்நாற்றத்தினை ஏற்படுத்தும். அப்படியில்லையெனில் நீங்கள் ஹல்ப் சாக்ஸ் அணியலாம். இது உங்கள் பாதங்களை மட்டும் மறைப்பதால் மேல் கால்கள் வழியாகக் காற்று உள்ளே செல்ல வழி கிடைக்கும்.

ஷர்ட் உயரம்
கேசுவல் ஷர்ட் எப்போதும் எல்லா இடங்களுக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த ஷர்ட் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என்பதும் உண்டு அதாவது நீங்கள் அணியும் ஷர்ட் எப்போதும் உங்களின் மணிக்கட்டு வரை உயரம் கொண்டதாகவும் பான்ட் பாக்கெட்க்கு குறைவான உயரம் கொண்டதாகவும் இருக்கக் கூடாது.

வாட்ச்
சில ஆண்கள் எல்லா வித அலங்காரப் பொருட்களையும் ஒரே நேரத்தில் அணிந்து தனது பேஷனை வெளிப்படுத்துகிறார்கள். கைகளில் வாட்ச், ரோப், ப்ரஸ்லேட் , பெல்ட் போன்ற எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அணிவது பேஷனை வெளிப்பதும் விதம் அல்ல. உங்களின் தோற்றத்தை உயர்த்தும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அலங்காரப் பொருட்களை மட்டும் அணிந்தால் போதுமானது.

personality,trendy,beauty,fashion,stylish look ,பெர்சனாலிட்டி,நவநாகரீகம்,அழகு,பேஷன்,ஸ்டைலிஷ் லுக்

ஜீன்ஸ்
ஆடைகளில் மிக முக்கியமான ஒன்று நீங்கள் அணியும் ஜீன்ஸ் தான். எனவே எப்போதும் நீங்கள் அணியும் ஜீன்ஸ் உங்கள் உடலுக்கு ஏற்ற பிட் ஆன ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் ஒல்லியாக இருப்பதாலோ அல்லது குண்டாக இருப்பதாலோ பெரிய ஜீன்ஸ்களை வாங்கி தோற்றத்தை மறைக்கலாம் என்று நினைத்தால் அது உங்கள் தோற்றத்தை மேலும் மோசமாகக் காட்சியளிக்க வைக்கும் எனவே உங்களின் உடலுக்கு ஏற்ற பிட் ஆன ஒன்றை அணியுங்கள்.

உள் ஆடை
உங்களின் ஷர்ட்க்குள் இன்னொரு டி-ஷர்ட் அணிவது ஷர்ட்களில் கறை படியாமல் இருப்பதற்காகவும் வியர்வையிலிருந்து ஷர்ட் வீணாகாமல் இருப்பதற்காகவும் மட்டும் தான் எனவே நீங்கள் அணியும் அந்த உள்ளாடைகள் வெளிப்படையாகத் தெரியாமலும் உங்களின் ஷர்ட்க்கு ஏற்ற நிறத்திலும் இருக்க வேண்டும். எனவே எப்போதும் உங்கள் ஆடைகளில் கவனம் செலுத்தி மற்றவர்களை ஈர்த்திருங்கள்.

Tags :
|
|