Advertisement

பண்டிகை நாட்களில் அணிவதற்கு ஏற்ற சில ஆடை வகைகள்!

By: Monisha Sat, 12 Dec 2020 7:17:53 PM

பண்டிகை நாட்களில் அணிவதற்கு ஏற்ற சில ஆடை வகைகள்!

பொதுவாக பண்டிகை காலங்களில் அனைவரது உள்ளத்திலும் மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும். பண்டிகை என்றாலே புது ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் பண்டிகை நாட்களில் அணிவதற்கு ஏற்ற சில ஆடை வகைகளை தெரிந்து கொள்வோம்.

பண்டிகை காலங்களில் அணிவதற்கு ஏற்ற ஆடை வகைகளில் ஒன்று சிக் கிராப் டாப்கள் அதுவும் டிசைன் செய்யப்பட்ட பலாஸோக்கள் இதனுடன் இணையும் போது நீங்கள் வேறொரு பரிமாணத்தில் ஜொலிப்பீர்கள். இதனுடன் லாங் ஷ்ரக் இணையும்போது உங்கள் அழகு காண்போரைக் கவரும்.

கணுக்கால் வரைக்கும் நீளமுள்ள மல்டி ஸ்லிட் குர்தி மற்றும் அதனுடனான பலாஸோ உங்கள் பண்டிகையை பேரழகு பண்டிகையாக மாற்றும். பார்ட்டி ஆடைக்கான அத்தனை இலக்கணங்களும் இந்த ஆடையில் இருக்கிறது. உங்கள் கற்பனை திறனை கட்டவிழ்த்து சரியான மேக்கப் போட்டால் போதுமானது.

festive,dresses,palazzo,skirt,style ,பண்டிகை,ஆடைகள்,பலாஸோ,ஸ்கர்ட்,ஸ்டைல்

பேஷன் பியூஷன் என கூறப்படும் இந்த கோல்டு ஷோல்டர் டாப்ஸ் ஆடைகள் உங்கள் அழகை எளிதாக எடுத்துக் காட்டும். இதனுடன் அம்பிரெல்லா கட்டிங் ஸ்கர்ட் மற்றும் கமர்பந் இணைத்தால் செம அழகாக இருக்கும்.

எல்லோருக்குள்ளும் இருக்கும் துறுதுறு சிறுமியை வெளிக்கொணரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதுதான் ஷார்ட் டாப்ஸ் லாங் ஸ்கர்ட். நீண்ட பாவாடை உடன் டக் செய்த ஒரு டாப்ஸ் உங்களை சிறப்பாக மாற்றும்.

இந்திய ஆடைகள் என்று வரும்போது தவறாமல் இடம்பெறுவது அனார்கலி குர்திகள் தான். பேஸ்டல் வண்ணங்களில் ஒரு அனார்கலி குர்தி மற்றும் அதற்கு பொருந்தினார்போல பலாஸோ அணியுங்கள். பண்டிகையின் நாயகி நீங்கள்தான்.

நீளமான மாக்சிகள் சிலரின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. உங்கள் வளைவுகளை இது எடுத்துக்காட்ட தயங்காது. இதன் வடிவம் நீளமானது. அதே சமயம் ஸ்டைலானதும் கூட. இந்தியப்பெண்ணின் அழகை மாக்சிகள் மேலும் அழகாக்குகின்றன.

Tags :
|