Advertisement

காலேஜ் பெண்கள் விரும்பி அணியும் ஆடைகள் இவைகள் தான்!

By: Monisha Sun, 20 Dec 2020 6:08:05 PM

காலேஜ் பெண்கள் விரும்பி அணியும் ஆடைகள் இவைகள் தான்!

இந்தக் காலத்தைச் சேர்ந்த கல்லூரிக்கு செல்லும் இளம் பெண்கள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.

கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ். இவை டீஷர்ட்டுகள் அருமையாக ஒத்துப் போகும். அடுத்ததாக லெக்கின்ஸ், இது அணிய வசதி எல்லா கலர்களிலும் கிடைக்கிறது. மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணிய இதைவிட சிறந்த உடை எதுவுமில்லை.

பாவடை தாவணியின் வெஸ்டர்ன் அவதாரம் தான் லெஹங்கா. கேஷுவலாக அணிய முடியாவிட்டாலும் பிறந்த நாள், வெள்ளிக்கிழமை அல்லது காலேஜ் பங்ஷனுக்கு அணிகிறார்கள்.

ஸ்கர்ட்களின் ஏ லைன், அம்பெரல்லா, பென்சில், மெர்மெய்ட், பானல், ஏசிமெட்ரிகல், என விதம் விதமான பாவடைகள் உள்ளன. கால் பாதம் வரைத் தொடுகிற லாங் ஸ்கர்ட்களைத்தான் கல்லூரிப் பெண்கள் அதிகம் விரும்பி அணிகிறார்கள். இவை வண்ண வண்ணமாக அழகிய டிசைன்களில் பிரின்ட் செய்யப்பட்டுக் கிடைக்கிறது.

college girls,dresses,jeans,skirts,short kurtis ,காலேஜ் பெண்கள்,ஆடைகள்,ஜீன்ஸ்,ஸ்கர்ட்,ஷார்ட் குர்தி

தொள தொளவென்று பாவாடை போலிருக்கும் பலாஸோ வகை உடை அணிய வசதியானது. கேஷுவலாக அணியலாம். தகுந்த டாப்ஸுடன் அணிய பார்வைக்கும் அழகாக இருக்கும். ஃபார்மல் பேண்ட், கேதரிங், பாரலல், டைட்ஸ் என்று பல வகை உடை இருக்கிறது. டெனிம் ரகத்தில் குட்டைப் பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் கூட சில பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.

டாப்ஸ் பொருத்தவரையில் கல்லூரி பெண்கள் அடிக்கடி அணிய விரும்புவது டீஷர்ட். ஜீன்ஸுக்கு ஏற்ற மேலாடை இதுதான். ப்ளெயின், பிரிண்டட் டிசைன்களில் கிடைக்கிறது. பெண்களுக்கான ப்ராண்டட் டீஷர்ட் பெரிதும் விரும்புகிறார்கள். வாசகங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட டீஷர்டுகளுக்கு அதிக மவுசு.

ஷார்ட் குர்தி பார்க்கவும் அணியவும் வசதியாக இருப்பதால் அதிகம் வாங்குகிறார்கள். மிக்ஸ் மேட்ச் செய்து அணியவும் வசதியானது. எத்னிக்காக இருக்கும் அதே சமயம் மாடர்னாகவும் காண்பிக்கும் இந்த குர்தியை ஆல் டைம் ஃபேவரைட்டாக காலேஜ் பெண்கள் அறிவித்துவிட்டார்கள்.

college girls,dresses,jeans,skirts,short kurtis ,காலேஜ் பெண்கள்,ஆடைகள்,ஜீன்ஸ்,ஸ்கர்ட்,ஷார்ட் குர்தி

டைட் ஃபிட்டிங்கில் ஆரம்பித்து, அம்ப்ரெல்லா, அனார்க்கலி என சுடிதாரின் பரிணாம வளர்ச்சி எப்படியிருந்தாலும் அதை விரும்பி வாங்கி அணியவே இளம் பெண்கள் விரும்புகிறார்கள். மெட்டீரியல் வாங்கி தைத்து அணிவது அல்லது ரெடிமேடாகக் கிடைக்கும் சுடிதார்களையும் வாங்குகிறார்கள்.

பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட ஷர்ட்டுகள் சந்தையில் உள்ளன. ஃபார்மல் கேஷுவல், ஷார்ட் பலவகை உண்டு. ஜீன்ஸ், பென்சில் ஸ்கர்ட்டுகளுக்கு டாப்பாக அணியலாம். விதவிதமான காலர் வைத்த ஷர்ட்டுகளையும் அணிகிறார்கள்.

எப்போதாவது உடுத்தும் புடவை கூட காலேஜ் பெண்களின் லிஸ்டில் உள்ளது. அழகான டிசைனர் ப்ளவுஸுடன் கூட புடவைகளை விரும்பி அணிகிறார்கள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஏற்ற வகையில் ப்ளீட்ஸ் தைக்கப்பட்ட புடவை கூட கடைகளில் கிடைக்கிறது. என்ன உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக தகுந்த ஆக்ஸசரிகளுடன் அணிந்தால் நீங்களும் தேவதை தான்.

Tags :
|
|