Advertisement

பாரம்பரிய உடைகளை வாங்க ஆன்லைனில் எங்கு ஷாப்பிங் செய்யலாம்?

By: Monisha Thu, 17 Dec 2020 4:13:49 PM

பாரம்பரிய உடைகளை வாங்க ஆன்லைனில் எங்கு ஷாப்பிங் செய்யலாம்?

இந்திய பெண்கள் பெரும்பாலும் விரும்புவது பாரம்பரிய உடைதான். இந்தப் பண்டிகை நாட்களில் அற்புதமாக பாரம்பரிய உடையில் வலம் வர நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம். இந்த பதிவில் முன்னணி பிராண்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

டபிள்யூ ஃபார் வுமன்
கனமான எம்பிராய்டரி மற்றும் பயங்கர அலங்காரம் இல்லாமல், ட்ரெண்டியான ஸ்லிட் கொண்ட பிரிண்ட் செய்யப்பட்ட குர்தா ரகங்களை இங்கு காணலாம். டிசைனும், துணியின் தன்மையும் இளமை உணர்வைத் தரும். துணியின் தன்மை மிகவும் மென்மையானது. வண்ண வண்ண பிரிண்ட்களில், எளிமையாக இருக்கக்கூடியது இந்த பிராண்ட்.

பிபா
இந்தியப் பாரம்பரிய உடை வகைகளில் முதன்மையான பங்கு பிபா பிராண்ட்க்கு உண்டு. இங்கு குர்தா முதல் சல்வார்-கமீஸ், துப்பட்டா, பாட்டம்-வியர், பட்டியாலா, கலந்து தேர்ந்துதெடுத்துக்கொள்ளும் வகையான உடைகள், அனார்கலி போன்ற பல்வேறு காம்பினேஷன்களில் எக்கச்சகமான எலிகண்ட் வகைகளில் பெண்களுக்கு கிடைக்கிறது. இரண்டு வயது பெண் குழந்தை முதல், பெரியவர்கள் வரை எக்கச்சக்க காலெக்ஷன்ஸ் கிடைக்கிறது . உடையைப் பார்த்தாலே தெரிந்துவிடும், இது பிபா பிராண்ட் என்று. அந்தளவிற்கு தனித்துவம் வாய்ந்தது.

online shopping,traditional style,embroidery,trend,brand ,ஆன்லைன் ஷாப்பிங்,பாரம்பரிய உடை,எம்பிராய்டரி,ட்ரெண்ட்,பிராண்ட்

ஸோச்
பாரம்பரிய உடைக்கு தற்காலத்துப் பெண்களின் சாய்ஸ் ஸோச். அனார்கலி, புடவைகள், ரெடிமேட் பிலௌஸ், பாவாடை, டாப்ஸ், டுனிக்ஸ், சல்வார், மெட்டீரியல், போன்ற பல ரகங்கள் தற்காலத்து ட்ரெண்டில் கலக்குகிறது. ஸோச்சில் தற்போது ப்ரிண்ட்ஸ், வர்ணங்கள், வேலைப்பாடு, துணியின் தரம் ஆகிய அனைத்தும் அருமையாக இருக்கிறது.

ஃபேப் இண்டியா
பிபாவிற்கு அடுத்தபடியாக ஃபேப் இண்டியாவில் பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் சேர்த்து பாரம்பரிய உடைகளை பல வர்ணங்களில் பல ரகங்களில் தனித்துவமாக தயாராகிறது. அதனால் உங்கள் குடும்பம் மொத்தத்திற்கும், ஆன்லைனில் வாங்கி விடலாம். ஃபேப் இண்டியாவில், பட்டு, பருத்தி, சணல்(ஜூட்) ஆகியவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கிறார்கள்.

க்ளோபல் தேசி
பெண்களுக்கான தரமான பாரம்பரிய ஆடை தேர்விற்கு க்ளோபல் தேசியைத் தேர்வு செய்யுங்கள். தைத்த புடவை, அனார்கலி, எம்பிராய்டரி குர்தா, ஜம்ப்சூட், கவுன் போன்ற பல விதமான ஆடைகள் இந்த பண்டிகைக்காக புதிதாக வந்திருக்கிறது.

Tags :
|