Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Tue, 29 Sept 2020 4:02:26 PM

சென்னையில் கொரோனாவுக்கு 11,043 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,64,744 ஆக உள்ளது. மருத்துவமனையில் தற்போது 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,231
அண்ணா நகர் - 1,245
தேனாம்பேட்டை - 1,058
தண்டையார்பேட்டை - 730
ராயபுரம் - 880
அடையாறு - 971
திரு.வி.க. நகர் - 903
வளசரவாக்கம் - 856
அம்பத்தூர் - 791
திருவொற்றியூர் - 249
மாதவரம் - 415
ஆலந்தூர் - 630
பெருங்குடி - 485
சோழிங்கநல்லூர் - 341
மணலி - 193

Tags :