Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 14 July 2020 12:37:06 PM

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

tirunelveli district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,026 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 836 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|