Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1797 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1797 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Thu, 01 Oct 2020 5:48:07 PM

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1797 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆயிரத்து 797பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 58ஆயிரத்து 758பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 297பேர் உயிரிழந்துள்ளனர்.

corona localization,controls,nature,vulnerability ,கொரோனா பரவல், கட்டுப்பாடுகள், குணம், பாதிப்பு

மேலும், 14ஆயிரத்து 490பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 971பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கனடாவில் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

Tags :
|