Advertisement

கொரோனா பரவலால் 1.89 கோடி இந்தியர்கள் வேலையிழப்பு

By: Nagaraj Thu, 20 Aug 2020 7:56:51 PM

கொரோனா பரவலால் 1.89 கோடி இந்தியர்கள் வேலையிழப்பு

வேலையிழப்பு... கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 லட்சம் இந்தியர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக அளவில் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. லட்சக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையிலும் உலக நாடுகளுக்கு பொருளாதார இழப்பை கொரோனா பரவல் ஏற்படுத்தி உள்ளது. இதில் இந்தியா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

job loss,corona period,indians,regrettable ,வேலையிழப்பு, கொரோனா காலம், இந்தியர்கள், வருந்தத்தக்கது

இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில், ஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் பேர் வேலை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைத்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்திலேயே அதிகளவிலான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் 1 லட்சம் பேர் மட்டுமே வேலையிழந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 1.77 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். மாத ஊதியத்துடன் கூடிய வேலை இழப்பு அதிகரிப்பு வருந்தத்தக்கது என அம்மையத்தின் சிஇஓ மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :