Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானில் ‘மேசக்’ புயல் காரணமாக கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கடலில் மூழ்கியதில் 2 பேர் மீட்பு

ஜப்பானில் ‘மேசக்’ புயல் காரணமாக கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கடலில் மூழ்கியதில் 2 பேர் மீட்பு

By: Karunakaran Mon, 07 Sept 2020 09:16:52 AM

ஜப்பானில் ‘மேசக்’ புயல் காரணமாக கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கடலில் மூழ்கியதில் 2 பேர் மீட்பு

‘கல்ப் லைவ் ஸ்டாக்-1’ என்ற கப்பல் நியூசிலாந்து நாட்டின் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவின் டாங்ஷான் நகரை நோக்கி 43 கப்பல் ஊழியர்கள் மற்றும் 6 ஆயிரம் கால்நடைகளுடன் புறப்பட்டது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கிழக்கு சீன கடலில் ‘மேசக்’ என்ற பலத்த புயல் ஏற்பட்டு, மணிக்கு 210 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற பதிவானதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியது.

கால்நடைகளை ஏற்றி சென்ற துபாய் கப்பலில் புயல் காரணமாக என்ஜின் நின்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பல் சேதமடைந்து மூழ்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கப்பலில் இருந்து அவசர தகவல்களின் மூலம் உதவி கோரப்பட்டது. அதன்பின், ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சேதமடைந்த கப்பலில் உள்ள ஊழியர்களை தேடும் பணி தொடங்கியது.

rescue,ship,cattle sinks,japan ,மீட்பு, கப்பல், கால்நடை , ஜப்பான்

கடும் புயல் காரணமாக ஊழியர்களை தேடும் பணி தாமதமானநிலையில், தற்போது சூறாவளி புயல் சற்று குறைந்ததை தொடர்ந்து மீண்டும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.விமானம் மூலம் தேடப்பட்டதில் அந்த கப்பலின் தலைமை அதிகாரி கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயக்கமான நிலையில் ஒரு ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தற்போது, நேற்று அந்த கப்பலில் இருந்து தப்பித்து மிதவையில் மிதந்து வந்துகொண்டு இருந்த கப்பல் ஊழியரை ஜப்பான் நாட்டு கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். தெற்கு ஜப்பானின் அமாமி ஒஷிமா தீவு பகுதி அருகே மற்ற ஊழியர்கள் மற்றும் கப்பலை தேடி வருகின்றனர்.


Tags :
|
|