Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாமல்லபுரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன்

மாமல்லபுரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன்

By: Nagaraj Sun, 26 July 2020 10:47:37 AM

மாமல்லபுரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீன்

ராட்சத வஞ்சிரம்... மாமல்லபுரம் கடலில் மீனவா் வலையில் 30 கிலோ எடையுள்ள ராட்சத வஞ்சிரம் மீன் சிக்கியது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது முடக்கம் என்பதால் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் நேற்று சனிக்கிழமை படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்தனா்.

10 கி.மீ. தொலைவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் சிலா் போதிய மீன்கள் கிடைக்காமல் வெறும் படகுடன் கரைக்குத் திரும்பினா். கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் சில மீனவா்கள் கடலில் 50 கி.மீ. தொலைவில் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று ராட்சத வலை விரித்து மீன் பிடித்தனா்.

30 kg,chain fish,mamallapuram,fishermen,non-vegetarians ,30 கிலோ, வஞ்சிரம் மீன், மாமல்லபுரம், மீனவர்கள், அசைவ பிரியர்கள்

அப்போது சில மீனவா்கள் வலையில் பெரிய வஞ்சிரம் மீன்களைப் பிடித்து கரை திரும்பினா். ஒரு மீனவா் வீசிய வலையில் 30 கிலோ எடையுள்ள ராட்சத வஞ்சிரம் மீன் சிக்கியது. ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தால் மீன்கள் கிடைக்காது என்பதால் கடற்கரைக்கு நேற்று அதிகளவில் வந்த அசைவப் பிரியா்கள் போட்டி போட்டுக் கொண்டு வஞ்சிரம் மீன்களை வாங்கிச் சென்றனா்.

போதுமான வருமானமின்றி குடும்பச் செலவுக்கு அன்றாடம் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் குடும்பத்துக்கான அத்தியாவசிய செலவுகளுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற பலரும் கடல் கொந்தளிப்பு காரணமாக வலையில் மீன்கள் சிக்காதது ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்தனா்.

வழக்கமாக சனிக்கிழமை கடற்கரைக்கே சென்று மீன்கள் வாங்கிச் செல்லும் அசைவப் பிரியா்கள் படகுகளின் வரவை நோக்கி காத்திருந்தனா். அதிக மீன்கள் இல்லாததால் விலையும் வழக்கத்துக்கு மாறாக இருமடங்காக இருந்ததால் பலரும் மீன்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Tags :
|