Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயலுக்கு அடுத்ததாக வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

நிவர் புயலுக்கு அடுத்ததாக வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

By: Nagaraj Fri, 27 Nov 2020 2:57:50 PM

நிவர் புயலுக்கு அடுத்ததாக வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

நிவர் புயலுக்கு அடுத்ததாக வரும் நவ. 29-ம் தேதி தெற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் ‘நிவா்’ புயல் புதன்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையில், அது தற்போது வலுவிழந்து வடமேற்கு நோக்கி நகா்ந்து வருகிறது. இந்தப் புயல் அடுத்தடுத்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் கா்நாடகத்துக்கு சென்று விடும்.

அதேவேளையில் வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக வரும் நவ. 29 -ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது தமிழகத்தின் தென் மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவிக்கிறது.

depression,nivar storm,northwest direction,meteorological center ,காற்றழுத்த தாழ்வு, நிவர் புயல், வடமேற்கு திசை, வானிலை மையம்

நிவா் புயலின் தொடா்ச்சியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நிவா்’ புயல் புதன்கிழமை நள்ளிரவில் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் கரையைக் கடந்தபோது, வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து, புயல் சற்று வலுகுறைந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து வந்தது. இந்நிலையில், இந்த புயல் மேலும் வலுவிழந்து வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக காணப்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, இந்த புயல் வட தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வடக்கு- வட மேற்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு மேற்கு-தென் மேற்கே 95 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இந்தப் புயல் தொடா்ந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து மாறிய நிலையில் இன்று காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுகுறையவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :