Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

By: Nagaraj Fri, 20 Nov 2020 4:05:47 PM

வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதனால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

depression,heavy rain,warning to fishermen,weather ,காற்றழுத்த தாழ்வு, கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை, வானிலை

மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வால் நவம்பர் 23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, கனமழை பெய்யக்கூடும் என்றும், ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :