Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும்- கமல்ஹாசன்

என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும்- கமல்ஹாசன்

By: Monisha Wed, 16 Dec 2020 5:10:00 PM

என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும்- கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடங்கி உள்ளார்.
நேற்று தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வரும் வழியெல்லாம் அன்பு மழையில் நனைந்தபடி வந்தேன். சாலைகள் எல்லாம் சாக்கடைகளாக மாறி மோசமான நிலையில் இருப்பதை பார்த்து நான் கொஞ்சம் தாமதமாக அரசியலுக்கு வந்துவிட்டோனோ என்று நினைத்தேன்.

தேர்தலில் வெற்றி என்பது விலை கொடுத்து வாங்குவது அல்ல. மக்களாக கொடுப்பது. இனியாவது அதனை மக்களாகிய நீங்கள் தீர்மானியுங்கள். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தரத்திலான உபகரணங்கள் மீனவர்களுக்கு கொடுக்கப்படும். ஒரு மீனவர் கூட கடலில் பலியாக நாங்கள் விடமாட்டோம். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வி‌ஷயத்தில் முழுமையாக நீதி கிடைக்க போராடுவோம்.

election,kamal haasan,campaign,fishermen,rights ,தேர்தல்,கமல்ஹாசன்,பிரச்சாரம்,மீனவர்கள்,உரிமை

ஜெயராஜ், பென்னிக்ஸ் போன்றவர்கள் லாக்கப் சாவுகள் ஏற்படாத வண்ணம் போலீஸ் துறையை சீரமைப்பது எங்கள் கடமை. காவல்துறையினருக்கு குறித்த நேரம் பணி வழங்கினால் அவர்கள் மனிதர்களாக இருப்பார்கள். காவல்துறை கண்டிப்பாக எங்கள் ஆட்சியில் சீரமைக்கப்படும்.

போலீசாரின் வாழ்வும், காவல்துறையும் சீரமைக்கப்பட வேண்டும். அதற்கான நிபுணர்கள் உள்ளனர். எனவே மக்கள் ஓட்டு போடுவதை சந்தேகம் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு அழுத்தி போடுங்கள். எங்களுக்கு இடம் இல்லாமல் செய்வதற்காக எல்லா சூழ்ச்சிகளும் நடக்கிறது. டார்ச் லைட்டை ஒழித்தால் ஒளி வராமல் போய்விடுமா?. எங்கள் கூட்டத்தில் நிறைய அறிவாளிகள் உள்ளனர். அந்த அறிவு ஒளி போதும் எங்களுக்கு.

நீங்கள் என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும். எனக்கு தெரிந்தது பெயர்கள் மட்டுமே. ஜாதி அல்ல. மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியை வெல்ல விடுங்கள். நல்லதே நடக்கும். ஏனெனில் நான் தினசரி முகம் பார்க்கும் கண்ணாடியாக நீங்கள் மாறிவிட்டீர்கள். எனவே சீரமைப்போம் தமிழகத்தை என அவர் பேசினார்.

Tags :