Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிப்பு; பெற்றோர்கள் பாராட்டு

பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிப்பு; பெற்றோர்கள் பாராட்டு

By: Nagaraj Thu, 03 Sept 2020 1:19:27 PM

பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிப்பு; பெற்றோர்கள் பாராட்டு

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

விளையாட்டு என்ற பெயரில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கியதாக பப்ஜி மீது நாடு தழுவிய அளவில் புகார் எழுந்தது. இந்த சூழலில், இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

babji,118 processors,prohibition,federal government,action ,பப்ஜி, 118 செயலிகள், தடை விதிப்பு, மத்திய அரசு, அதிரடி

இந்த தடையின் படி, எந்தெந்த "செயலி"களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. குறிப்பாக, கட் - கட், பைடு, பேஸ்-யூ என்ற பியூட்டி ஆப், வீ சாட், சைபர் ஹண்டர், ரைஸ் ஆப் கிங்டம், கேம் ஆப் சுல்தான்ஸ், லூடோ, ஸ்மார்ட் ஆப் லாக், மியூசிக் பிளேயர், பைக் ரேசிங் மோட்டோ, வி.பி.என் ஃபார் டிக்-டாக், மாஃபியா சிட்டி, ரூல்ஸ் ஆப் சர்வைவல் உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே, டிக் - டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. எனவே, மொத்தம் 234 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Tags :
|