Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிண்டர் உட்பட 5 செயலிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிப்பு

டிண்டர் உட்பட 5 செயலிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிப்பு

By: Nagaraj Thu, 03 Sept 2020 1:18:31 PM

டிண்டர் உட்பட 5 செயலிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிப்பு

தடை விதிப்பு... அநாகரிகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாக டிண்டர் உள்ளிட்ட 5 செயலிகளுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு கண்காணிப்புக் குழு அநாகரிகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறி ஐந்து செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், டிண்டர், டேக், ஸ்கவுட், கிரைண்டர் மற்றும் சாய் ஆகிய செயலிகளின் முறையற்ற உள்ளடக்கப் பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

prohibition,internet processors,pakistan,notice ,தடை விதிப்பு, இணைய செயலிகள், பாகிஸ்தான், அறிவிப்பு

பாகிஸ்தானின் சட்ட விதிகளின்படி “டேட்டிங் சேவைகள்” மற்றும் நேரடி இணைய சந்திப்பு ஆகிய பயன்பாடுகளை அகற்றுமாறு குறிப்பிட்ட செயலிகளின் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தன. "குறிப்பிட்ட நேரத்திற்குள் அரசின் அறிவிப்புகள் குறித்து செயலிகளின் நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை என்பதால், அந்த செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் இணைய செயலிகள் மீது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :