Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரதியார் பிறந்த நாள் விழா நிறைவு தின நிகழ்ச்சி மத்திய நிதி மந்திரி பங்கேற்பு

பாரதியார் பிறந்த நாள் விழா நிறைவு தின நிகழ்ச்சி மத்திய நிதி மந்திரி பங்கேற்பு

By: Monisha Mon, 21 Dec 2020 12:49:28 PM

பாரதியார் பிறந்த நாள் விழா நிறைவு தின நிகழ்ச்சி மத்திய நிதி மந்திரி பங்கேற்பு

பாரதியார் பிறந்த நாள் விழா வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பன்னாட்டு பாரதி திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். விழாவின் நிறைவு தின நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி எழுத்தாளர் சிவசங்கரி பாராட்டினார்.

விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சபைகளிலும் பாரதியாரை பற்றி பாடி வருகிறார். பாரதியார் தன்னுடைய நிலையை ஒருபோதும் கூறியது இல்லை. நாட்டு மக்களை ஒன்று திரட்டி சுதந்திரம் அடைவதற்கு மக்கள் எப்படி இருக்க வேண்டும்? நாட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை எடுத்து சொல்வதை மட்டுமே தனது கடமையாக வைத்திருந்தார்.

bharathiyar,festival,fame,video,songs ,பாரதியார்,திருவிழா,புகழ்,காணொலி காட்சி,பாடல்கள்

பாரதியாரின் பாடல்களில் சோர்வு, தளர்ச்சி, நம்பிக்கை இழப்பு, செயல்இழப்பு தன்மை இல்லை. இவை அவருடைய பாடல்களில் காணப்படாத உணர்ச்சிகள். வீரம், தன்னம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே அவருடைய பாடல்களில் இருந்தது. அவருடைய பாடலை கேட்டாலே நமக்கு வீரம் வந்துவிடும். தமிழ்ப்பற்று, தமிழ் புலமை இருந்தாலும் பாரத அன்னையின் தவப்புதல்வனாகவே உணர்ந்தவர். தமிழர்களை புகழ்ந்தாலும், பாரத நாட்டை பாடல்களில் இணைத்தவர். பாரத தாயை ஒவ்வொரு எண்ணத்திலும் ரசித்து பாடல்களை பாடியவர் பாரதியார்.

இனிமையிலும் வீரத்தை பாடல்களில் கொண்டு வரும் சக்தி பாரதிக்கு மட்டுமே உண்டு. கோபத்தை வெல்வது எவ்வளவு முக்கியம்? என்பதை பாடல்களில் எடுத்துக்காட்டு மூலமாக விளக்கி இருக்கிறார். தேச பக்தி, கவிதை, நாட்டுப்பற்று எல்லாவற்றையும் பாரதியை பற்றி குறிப்பிடும்போது சொல்கிறோம். பாரதியாரை எவ்வளவு படித்தாலும், நமக்கு புதிது, புதிதாக தோன்றிக்கொண்டே இருக்கும் என அவர் பேசினார்.

Tags :
|
|