Advertisement

பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.85 அடியாக நீட்டிப்பு!

By: Monisha Mon, 31 Aug 2020 12:39:31 PM

பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.85 அடியாக நீட்டிப்பு!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.85 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ளது.

bhavani sagar dam,water level,irrigation,rainfall ,பவானிசாகர் அணை,நீர்மட்டம்,பாசனம்,மழை

நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 851 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர் இருப்பு 28.8 டிஎம்சி ஆக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,050 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 592 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 28.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags :