Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குளம்பி குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியுமா ?

குளம்பி குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியுமா ?

By: Karunakaran Mon, 15 June 2020 11:51:36 AM

குளம்பி குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியுமா ?

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்ற. அந்த வகையில், சீனாவை சேர்ந்த டாக்டர் லி வென்லியாங், குளம்பி பருகினால் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிடும் என்ற தகவலை சமூக வலைதளங்களில்வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் எனவும், பின்னர் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்ட தகவல்களில், மெத்திலாக்சைந்தைன், தியோப்ரோமைன் மற்றும் தியோஃபோலைன் உள்ளிட்டவை கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கொண்டது என்றும், இவை அனைத்தும் குளம்பியில் உள்ளது என அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வுகானில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு குளம்பி கொடுக்கப்பட்டதும் அவர்கள் நோய் தொற்றில் இருந்து மீண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,coffee,china,li wenliang ,குளம்பி,கொரோனா வைரஸ்,சீனா,லி வென்லியாங்,

இந்நிலையில் இந்த வைரல் தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், டாக்டர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டதும், பின்னர் வைரஸ் காரணமாக உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்ய எந்த மருந்தையும் கண்டறிந்ததை நிரூபிக்கும் விவரங்கள் கிடைக்கவில்லை.

மெத்திலாக்சைந்தைன், தியோப்ரோமைன் மற்றும் தியோஃபோலைன் உள்ளிட்டவை குளம்பியில் நிறைந்து இருக்கின்றன. ஆனால் அவை கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்யும் என அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதன்மூலம் குளம்பி குடித்தால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்ற தகவல் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tags :
|
|