Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

By: Monisha Mon, 28 Dec 2020 12:09:01 PM

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain,atmosphere,chance,dry weather,newsletter ,மழை,வளிமண்டலம்,வாய்ப்பு,வறண்ட வானிலை,செய்திக்குறிப்பு

அதேபோல், 29, 30 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

31-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|