Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 300 இடங்களில் சோதனைச்சாவடி - போலீஸ் கமி‌‌ஷனர் தகவல்

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 300 இடங்களில் சோதனைச்சாவடி - போலீஸ் கமி‌‌ஷனர் தகவல்

By: Monisha Tue, 29 Dec 2020 08:02:19 AM

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 300 இடங்களில் சோதனைச்சாவடி - போலீஸ் கமி‌‌ஷனர் தகவல்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க சாலைகளில் 300 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை நேற்று மாலை போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நலத்திட்டங்களை செயல்படுத்த சென்னையில் 12 துணை கமி‌‌ஷனர் சரகங்களிலும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் 12 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

new year,celebration,checkpoint,hotels,club ,புத்தாண்டு,கொண்டாட்டம்,சோதனைச்சாவடி,ஓட்டல்கள்,கிளப்பு

அரசு சொன்ன விதிமுறைகளின்படி கடற்கரை பகுதி, சாலைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வீடுகளில்தான் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஓட்டல்கள், கிளப்புகளில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடலாம். ஆனால் டிக்கெட் வசூலித்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டல் மற்றும் கிளப்புகளில் அனுமதி இல்லை. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க சாலைகளில் 300 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, வாகன சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Tags :
|