Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யூடியூபில் பிரபலமடைந்த மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் திடீர் சோதனை

யூடியூபில் பிரபலமடைந்த மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் திடீர் சோதனை

By: Nagaraj Sun, 02 Aug 2020 11:46:36 AM

யூடியூபில் பிரபலமடைந்த மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் திடீர் சோதனை

யூடியூப்ல் மிகவும் பிரபலமானவர் மதுரையை சேர்ந்த மாரிதாஸ். இவரது வீட்டில் நேற்று திடீரென சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை கே புதூர் சூர்யா நகரை சேர்ந்த மரியதாஸ் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், சாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும் தொலைக்காட்சி நெறியாளர்கள் திராவிட கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கருத்துகளை வெளியிட்டார்.

cybercrime,trial,maritas,investigation,sensationalism ,சைபர் கிரைம், சோதனை, மாரிதாஸ், விசாரணை, பரபரப்பு

இந்நிலையில் மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பெயரில் சென்னை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பி தலைமையில் 4 போலீசார் நேற்று மதுரை வந்து மாரிதாஸ் வீட்டுக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாரிதாஸ் வீட்டில் அவர்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரது வீட்டிற்கு முன்பாக திரண்டனர். இதனால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|