Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமித்ஷாவை வரவேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் விமானநிலையம் வருகை

அமித்ஷாவை வரவேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் விமானநிலையம் வருகை

By: Monisha Sat, 21 Nov 2020 2:21:38 PM

அமித்ஷாவை வரவேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் விமானநிலையம் வருகை

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

amitsha,edappadi palanisamy,o panneer selvam,airport,chennai ,அமித்ஷா,எடப்பாடி பழனிசாமி,ஒ பன்னீர் செல்வம்,விமானநிலையம்,சென்னை

அரசு நிகழ்ச்சிக்கு பின்னர் தனியார் நட்சத்திரவிடுதியில் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் விமானநிலையம் வருகை தந்துள்ளனர்.

Tags :