Advertisement

பத்திரிகையாளா் அட்டைகளை புதுப்பிக்க சீனா தாமதம்

By: Nagaraj Tue, 08 Sept 2020 1:34:51 PM

பத்திரிகையாளா் அட்டைகளை புதுப்பிக்க சீனா தாமதம்

சீன அரசு தாமதம் செய்கிறது... சீனாவில் பணியாற்றும் அமெரிக்க பத்திரிகையாளா்களுக்கான பத்திரிகையாளா் அட்டைகளை புதுப்பிக்க சீனா தாமதம் செய்வதால், அவா்கள் சீனாவை விட்டு வெளியேற்ற செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ஜஹு லிஜியான் கூறுகையில், 'அமெரிக்க பத்திரிகையாளா்களின் அட்டைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் வீம்பாகவும், நியாயமற்ற வகையிலும் நடந்து கொள்கிறது. சீனாவின் வழக்கமான, நியாயமான கோரிக்கைகளுக்கு அமெரிக்கா செவிசாய்ப்பதில்லை.

சீனாவில் உள்ள அமெரிக்க பத்திரிகையாளா்கள் மீது அக்கறை இருந்தால், அமெரிக்காவில் உள்ள அனைத்து சீன பத்திரிகையாளா்களின் விசாக்களை அமெரிக்கா நீட்டிக்க வேண்டும். இருநாட்டு பத்திரிகையாளா்களையும் அரசியல் ஆதாயத்துக்காக பணயக் கைதிகளாக ஆக்கக் கூடாது.

american journalists,china,permission,delay ,அமெரிக்க பத்திரிகையாளர்கள், சீனா, அனுமதி, தாமதம்

அமெரிக்கா தொடா்ந்து தவறான வழியில் சென்று தவறுகளைச் செய்து கொண்டிருந்தால், சீனாவும் தனது சட்ட உரிமைகளைப் பாதுகாக்க தேவையான பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

அமெரிக்காவில் பணியாற்றும் சீன பத்திரிகையாளா்கள் கம்யூனிஸ்ட் கட்சி ஏஜென்டுகளைப் போல் செயல்படுகிறாா்கள் என அமெரிக்க குற்றம்சாட்டியது. அமெரிக்காவில் சீன ஊடகங்களுக்காக பணியாற்றும் சீனா்களுக்கு 90 நாள் விசா கட்டுப்பாட்டை அமெரிக்கா கொண்டு வந்த்து.

இதற்து பதிலடியாக சீனா, வெளிநாட்டு பத்திரிகையாளா்களுக்கான அனுமதியை திரும்பப் பெற்றதால், சுமாா் 17 வெளிநாட்டு பத்திரிகையாளா்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனா். மேலும், வெளிநாட்டு பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு அனுமதியை தற்போது இரண்டு மாதங்களாக சீனா குறைத்துள்ளது.

Tags :
|