Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்

By: Monisha Wed, 16 Dec 2020 10:04:44 AM

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருமயம் வட்டம், சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், இலுப்பூர் வட்டம், பெருஞ்சுனை பகுதியைச் சேர்ந்த ராசுவின் மனைவி முனியம்மாள் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ஆலங்குடி வட்டம் மற்றும் சரகம், கே.வி.எஸ். தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் சுவேதா விளையாடிக்கொண்டிருந்தபோது, மின்கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கறம்பக்குடி வட்டம், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தத்தின் மகள் அஞ்சலி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

குளத்தூர் வட்டம், இளந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மரக்கிளையை வெட்டும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியைச் சேர்ந்த எபின் கட்டிட வேலையின்போது, நிலைதடுமாறி மின்கம்பி மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், பெலகாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், பெரம்பலூர் மாவட்டம், புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜின் மகன் காமராஜ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

electricity,death,chief minister,condolences,relief ,மின்சாரம்,உயிரிழப்பு,முதலமைச்சர்,இரங்கல்,நிவாரணம்

வேப்பந்தட்டை வட்டம், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மின்பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், குன்னம் வட்டம், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் விவசாய நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருப்பூர் மாவட்டம், கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயநாராயணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஊத்துக்குளி வட்டம், ஊத்துக்குளியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தாராபுரம் வட்டம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவாரூர் மாவட்டம், அரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மின்கம்பியில் சைக்கிள் ஏறியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருப்பத்தூர் மாவட்டம், நாச்சார்குப்பம் மதுரா விளாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி பாரதி அறுந்து விழுந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

Tags :
|