Advertisement

நாகர்கோவிலிலிருந்து கோவைக்கு ரயில் சேவை துவக்கம்

By: Monisha Wed, 16 Dec 2020 5:48:46 PM

நாகர்கோவிலிலிருந்து கோவைக்கு ரயில் சேவை துவக்கம்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக ரயில்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும், மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாகர்கோவிலிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இரவு நேர ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து காலையில் கோவைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

corona,curfew,train,transport,start ,கொரோனா,ஊரடங்கு,ரயில்,போக்குவரத்து,இயக்கம்

அதன்படி இன்று காலை முதல் கோவைக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு கோவைக்கு ரயில் புறப்பட்டது. முதல் நாளான இன்று குறைவான பயணிகளே பயணம் செய்தனர். நெல்லை, மதுரை வழியாக இரவு 8.20 மணிக்கு ரயில் கோவையை சென்றடையும். அங்கிருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

சென்னை, கோவையை தொடர்ந்து தாம்பரத்திற்கும் ரயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18-ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் ரயில் இயக்கப்படும் இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு செல்லும். இதை தொடர்ந்து மற்ற ரயில்களையும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

Tags :
|
|
|