Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க போட்டி - இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க போட்டி - இஸ்ரோ அறிவிப்பு

By: Monisha Sat, 13 June 2020 09:30:41 AM

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க போட்டி - இஸ்ரோ அறிவிப்பு

ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

school students,isro,new announcement,competition,online ,பள்ளி மாணவர்கள்,இஸ்ரோ,புது அறிவிப்பு,போட்டி,ஆன்லைன்

பொதுமக்களிடம் டிஜிட்டல் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், போட்டியில் பங்கேற்பவர்கள் ‘டிஜிட்டல் இந்தியா‘ தத்துவத்தை தங்கள் போட்டிகளில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்ய, https://icc2020.isro.gov.in/icc/register.jsp, மின்னஞ்சல் ஐடி: [email protected] http://www.isro.gov.in, https://www.facebook.com/ISRO/, https://twitter.com/isro தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags :
|