Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை... குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை... குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

By: Monisha Wed, 18 Nov 2020 08:33:40 AM

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை... குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. நெல்லை மாநகர பகுதியில் மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதேபோல் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவிலும் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. மேலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

nellai,tenkasi,thoothukudi,heavy rains,floods ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,கனமழை,வெள்ளப்பெருக்கு

அதேபோல் தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. காலை 11 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதேபோல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 169 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags :
|