Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் புதிதாக ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரேசிலில் புதிதாக ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 2:52:37 PM

பிரேசிலில் புதிதாக ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அந்நாட்டு மக்களை கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வரையிலான ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 413 ஆக உயர்ந்து உள்ளது.

coronavirus,brazil,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பிரேசில், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு ஒரே நாளில் 1,212 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள சா பாவ்லோ நகரத்தில், 7 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் அந்நகரம் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக உள்ளது.

சா பாவ்லோ நகரத்தில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 27 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர். சா பாவ்லோவுக்கு அடுத்து ரியோ டி ஜெனீரோ நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.

Tags :
|