Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,149 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,149 ஆக அதிகரிப்பு

By: Monisha Tue, 07 July 2020 5:58:50 PM

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,149 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் மொத்தம் 1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று 4 டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 6 பேர் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர், அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் அவருடைய மனைவி, பயிற்சி டாக்டர் ஆகிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பத்தில் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது மருத்துவமனை நடத்தி வரும் 71 வயது டாக்டர், அவருடைய மனைவி உள்பட 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

theni district,coronavirus,influence,kills,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னைக்கு கொரோனா சிறப்பு பணிக்கு சென்றுவிட்டு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 10 பேர் தேனிக்கு திரும்பி வந்தனர். அவர்களுக்கு தேவதானப்பட்டி சோதனை சாவடியில் பரிசோதனை செய்த போது 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி ஆண்டிப்பட்டியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்தார்பட்டியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,149 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|