Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 29 Sept 2020 09:27:39 AM

சீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்த நிலையில், சீனாவில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கொரோனாவுக்கு தற்போது பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

corona infection,outside,china,corona virus ,கொரோனா தொற்று, வெளியிடம், சீனா, கொரோனா வைரஸ்

இந்நிலையில் சீனாவின் பிரதான பகுதியில் நேற்று முன்தினம் ஷாங்காயில் 10, குவாங்டாங்கில் 5, இன்னர் மங்கோலியாவில் 3, புஜியனில் 2, ஷாங்ஸியில் ஒருவருக்கு என 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்ட சீன தேசிய சுகாதார கமிஷன், இவர்கள் அனைவரும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

இப்படி வெளியிடங்களில் இருந்து வந்து கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிகிச்சைக்கு பின்னர் 2,638 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 185 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இதில் யாரும் இறந்ததாக தகவல் இல்லை என சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

Tags :
|