Advertisement

நேற்று இலங்கையில் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Nagaraj Sat, 31 Oct 2020 12:37:20 PM

நேற்று இலங்கையில் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சுகாதார அமைச்சு தகவல்... இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 633 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 264 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 162 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 18 பேர் களுத்துறை மாவட்டத்தையும் 17 பேர் குருநாகல் மாவட்டத்தையும் 11 பேர் கேகாலை மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

corona,infection,ministry of health,isolation ,கொரோனா, தொற்று, சுகாதார அமைச்சு, தனிமைப்படுத்தல்

மேலும் இரத்தினபுரியில் 5 பேரும் காலி 4 பேரும் கண்டி மற்றும் மாத்தளையில் தலா 3 பேரும் அம்பாறையில் 2 பேரும் பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்த 138 பேருக்கும் 3 பொலிஸ் அதிகாரிகளுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆயிரத்து 100 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|