Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அல்பர்ட்டாவில் கொரோனா புதுப்பிப்பு கட்டுப்பாடுகள் 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும்

அல்பர்ட்டாவில் கொரோனா புதுப்பிப்பு கட்டுப்பாடுகள் 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும்

By: Nagaraj Fri, 11 Dec 2020 10:05:49 AM

அல்பர்ட்டாவில் கொரோனா புதுப்பிப்பு கட்டுப்பாடுகள் 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும்

4 வாரங்கள் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்... அல்பர்ட்டாவில் நடைமுறைப்படுத்தப்படடுள்ள கொவிட்-19 புதுப்பிப்பு கட்டுப்பாடுகள், அனைத்தும் குறைந்தது நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என முதல்வர் ஜேசன் கென்னி அறிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட மேம்பட்ட சுகாதார நடவடிக்கைகளில், அனைத்து வெளிப்புற மற்றும் உட்புற கூட்டங்களையும் தடைசெய்தல், அனைத்து உடற்பயிற்சி மையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகளை மூடுவது மற்றும் மதுக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவருந்தும் சேவைகளை தடை செய்வது ஆகியவை அடங்கும்.

மாகாணம் முழுவதும் முககக்கவசங்கள் கட்டாயமாக இருக்கும். அனைத்து அல்பர்ட்டா ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். இந்த முகக்கவச நடவடிக்கை வெறும் ஒரு ஆலோசனை அல்ல் இது ஒரு சட்ட ஆணை என்று அவர் கூறினார்.

சேகரிப்பு மற்றும் முககவசம் விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் அதே வேளையில், டிசம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மூடல்கள் தொடரும். அல்பர்ட்டாவாசிகள் அவர்களுடன் வாழும் மக்களைப் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தனியாக வசிப்பவர்கள் என்றால், பார்க்க இரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கலாம். வெளியாட்களுக்கு அனுமதியில்லை.

restaurants,lounge,entertainment,restrictions ,
உணவகங்கள், ஓய்வு அறைகள், பொழுது போக்கு, கட்டுப்பாடுகள்

சில்லறை வணிகம் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை, கொளதிறன் 15 சதவீதம் ஆகக் குறைக்கப்படும். இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்களைப் பொறுத்தவரை, அதிகபட்சம் 10 பேருக்கு மட்டுமே அனுமதி.

பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மையங்கள் முதல் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் வரை அனைத்தையும் மூட உத்தரவிடப்படும், மேலும் உணவகங்கள் வசந்த காலத்தில் செய்ததைப் போலவே உணவை வெளியே வாங்கிச் செல்லல் (டேக்-அவுட்), தெருவோரத்தில் எடுத்தல் (கர்ப்சைட் பிக்கப்) மற்றும் விநியோக முறைகளுக்குத் திரும்பும்.

உணவகங்களும் வெளிப்புற பொழுதுபோக்குகளும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் வரை திறந்திருக்கும். ஓய்வுஅறைகளைத் தவிர, உட்புற இடத்துடன் கூடிய பொழுதுபோக்கு வசதிகள் மூடப்படும்.

Tags :
|