Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆர்மீனியா பிரதமருக்கு கொரோனா; நலம் பெற்று மீண்டு வர பிரதமர் மோடி பிரார்த்தனை

ஆர்மீனியா பிரதமருக்கு கொரோனா; நலம் பெற்று மீண்டு வர பிரதமர் மோடி பிரார்த்தனை

By: Nagaraj Tue, 02 June 2020 11:36:47 AM

ஆர்மீனியா பிரதமருக்கு கொரோனா; நலம் பெற்று மீண்டு வர பிரதமர் மோடி பிரார்த்தனை

ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யன் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டுவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 63 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

armenia,india,pm modi,corona,prayer ,ஆர்மீனியா, இந்தியா, பிரதமர் மோடி, கொரோனா, பிரார்த்தனை

ஆசிய நாடான ஆர்மீனியாவின் பிரதமர் நிகோல் பஷின்யன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆர்மீனியாவில் இதுவரை 9,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

ராணுவ முகாமுக்கு செல்லும் முன் பிரதமர் நிகோல் பஷின்யன் சுயமாக பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதனால் அவர் வீட்டிலிருந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆர்மீனியா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவிலிருந்து விரைவாக மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திகிறேன். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆர்மீனியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|