Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 18 Sept 2020 10:11:19 AM

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்த 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

villupuram district,corona virus,infection,death,treatment ,விழுப்புரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,981-ஆக இருந்தது. அவர்களில் 9,032 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 861 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆனாலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனிற்றி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,115-ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|