Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை முறியடிக்க கை கோர்க்கும் நாடுகள்

சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை முறியடிக்க கை கோர்க்கும் நாடுகள்

By: Nagaraj Tue, 01 Sept 2020 6:13:48 PM

சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை முறியடிக்க கை கோர்க்கும் நாடுகள்

சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை முறியடிக்க, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன என்று தகவலக்ள் வெளியாகி உள்ளது. இதனால் வர்த்தக ரீதியாக சீனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என்று தெரிகிறது.

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஜப்பான் அமைச்சர் ஹிரோஷி கஜியமா, ஆஸ்திரேலியா அமைச்சர் சிமோன் பிர்மிங்காம் ஆகியோர் காணாலி காட்சி முறையில் ஆலோசனை நடத்தினார்கள்.

china,domination,india,australia,trade ,சீனா, ஆதிக்கம், இந்தியா, ஆஸ்திரேலியா, வர்த்தகம்

தொடர்ந்து இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தோ பசுபிக் மண்டலத்தில், சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, 3 நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வர்த்தகத்திற்கான வினியோகச் சங்கிலியை பலப்படுத்துவதற்கான முன்னெடுப்பை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக அளவில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை விழும் என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|