Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலூரில் வருவாய் துறையினர் ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பு

கடலூரில் வருவாய் துறையினர் ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பு

By: Nagaraj Wed, 25 Nov 2020 9:38:02 PM

கடலூரில் வருவாய் துறையினர் ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பு

ஒலி பெருக்கு மூலம் அறிவிப்பு... நிவர் புயல் கரையைக் கடக்கவிருப்பதையொட்டிக் கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்றிரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டிக் கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசு அதிகாரிகளின் அறிவிப்பை ஏற்றுக் கரையோரப் பகுதி மீனவர்கள் பள்ளிகள், அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்றுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

cuddalore,loudspeaker,announcement,nivar storm,public ,கடலூர், ஒலிபெருக்கி, அறிவிப்பு, நிவர் புயல், பொதுமக்கள்

படகுகளை இன்னும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல பொக்லைன், டிராக்டர்களை அனுப்பி உதவ வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதி தீவிரப் புயல் கரையைக் கடப்பதையொட்டிக் கடலூர் துறைமுகத்தில் பேரபாயத்தின் குறியீடாகப் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாகக் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

இந்நிலையில் கடலூரில் கடற்கரையோரக் குடியிருப்புகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர். காரைக்கால் துறைமுகத்தில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

கரையைக் கடக்கும் வரை நிவர் புயலின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். புயல் பாதிப்புகளைச் சீர்செய்யும் அரசின் முயற்சிகளுக்குப் பொதுமக்கள் தங்களின் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து முழு ஒத்துழைப்பு தரும்படி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :