Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை

ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை

By: Monisha Thu, 10 Dec 2020 10:33:41 AM

ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து சிறப்பு விமானம் நேற்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபிறகு அந்த விமானத்திற்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஒரு இருக்கையின் அடியில் இரண்டு பொட்டலங்கள் கேட்பாரற்று கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்த போது தங்கத்துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

gold,smuggling,plane,seat,trial ,தங்கம்,கடத்தல்,விமானம்,இருக்கை,விசாரணை

ரூ.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். துபாயிலிருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்தவர்கள், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து அந்த தங்க பொட்டலங்களை இருக்கையின் அடியில் மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்தும், விமான இருக்கைக்கு அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு பின்னர் விமான ஊழியர்கள் உதவியுடன் நாத தங்கத்தை வெளியே கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
|
|
|