Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சிகிச்சையில் டீகோப்ளானின் மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது

கொரோனா சிகிச்சையில் டீகோப்ளானின் மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது

By: Karunakaran Tue, 29 Sept 2020 3:00:05 PM

கொரோனா சிகிச்சையில் டீகோப்ளானின் மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 10 மாத காலத்தில் உலகம் முழுவதும் 3.31 கோடி பேரை தாக்கியுள்ளது. மேலும் இதனால் 9.97 லட்சம் பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள். இருப்பினும் இன்னும் இந்த தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்துகூட கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவையும் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு, ஏற்கனவே பிற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்துகிற மருந்துகளை சோதனை ரீதியில் அவசரத்துக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது அனுமதி தரப்பட்டுள்ள 23 மருந்துகளை டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வில், கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ‘டீகோப்ளானின்’ மருந்து, கொரோனா வைரஸ் சிகிச்சையில் நல்லபலனைத் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

decoplanine,corona treatment,drug,corona virus ,டெகோபிளானைன், கொரோனா சிகிச்சை, மருந்து, கொரோனா வைரஸ்

இந்த மருந்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எப்.டி.ஏ.) அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் படேல் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற லோபினாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் போன்ற மருந்துகளை விட ‘டீகோப்ளானின்’ 20 மடங்கு வரை அதிக செயல் திறன் மிக்கதாக கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், சமீபத்தில் ரோம் நகரில் உள்ள சபியென்சா பல்கலைக்கழகத்தில் டீகோப்ளானின் மருந்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும் இன்னும் அதிகளவிலான ஆய்வு தேவைப்படுகிறது. லேசான, மிதமான மற்றும் தீவிரமான நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்து அது எந்த அளவுக்கு பலன் தருகிறது என்று ஆராய்ந்தால்தான், கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் பங்களிப்பு குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்று கூறினார்.

Tags :
|