Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்க்கண்ட்டில் துர்கா கோவிலில் அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு

ஜார்க்கண்ட்டில் துர்கா கோவிலில் அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு

By: Karunakaran Sat, 24 Oct 2020 3:53:28 PM

ஜார்க்கண்ட்டில் துர்கா கோவிலில் அன்னைக்கு மகுடம் சூட்ட 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் மயூர்ஹண்ட் பகுதியில் புகழ்பெற்ற துர்கா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனித்துவமான சடங்காக ஒவ்வொரு ஆண்டும் துர்க்கா பூஜை விழாவின் போது கடவுள் துர்காவுக்கு மகுடம் சூட்ட ஒரு பக்தருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதன்மூலம் பக்தர்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை கடவுள் துர்கா நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. இதனால் துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் இடையே ஆர்வம் நிலவுகிறது. கடவுளுக்கு மகுடம் சூட்டும் சடங்குக்கு முன்பதிவு முறை பின்பற்றப்படுகிறது. இந்த முன்பதிவில் 2060-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

devotees,crown mother,durga temple,jharkhand ,பக்தர்கள், கிரீடம் தாய், துர்கா கோயில், ஜார்க்கண்ட்

இதுகுறித்து பூஜை குழுவின் தலைவர் அஸ்வினி சிங் கூறுகையில், இந்த சடங்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. துர்காவுக்கு மகுடம் சூட்ட பக்தர்கள் ஆர்வம் காட்டிய பின்னர் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படுகிறது. மகுடத்தின் விலை பக்தர்களால் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், மகுடம் தயாரிப்பாளர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு மகுடத்தின் விலை ரூ.20 ஆயிரம் ஆகும். மகுடம் சூட முன்பதிவு செய்தவர் இறந்த விட்டால் அவரது சார்பாக குடும்ப உறுப்பினர்கள் பூஜையில் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :