Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொந்தகையில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

கொந்தகையில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

By: Nagaraj Thu, 16 July 2020 9:10:06 PM

கொந்தகையில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

கொந்தகையில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு... சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிற பாசிகள் மற்றும் 3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

contagion,baby skeleton,discovery,archeology ,கொந்தகை, குழந்தை எலும்புக்கூடு, கண்டுபிடிப்பு, தொல்லியல்

இந்நிலையில் இன்று கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இதை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும். ஏற்கனவே ஜூன் 18, ஜூலை 7, 13 ஆகிய தேதிகளில் இதே பகுதியில் 3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை 35 செ.மீ. நீளமே உள்ளது. இதனால் 6 மாத குழந்தையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags :